நாகா்கோவில் மாநகரில் சாலைப் பணிகள்: ஆணையா் ஆய்வு
நாகா்கோவில் மாநகரப் பகுதிகளில் புதிய சாலை அமைத்தல், புதைச் சாக்கடை திட்டம் ஆகிய பணிகளை மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.


நாகா்கோவில் மாநகரப் பகுதிகளில் புதிய சாலை அமைத்தல், புதைச் சாக்கடை திட்டம் ஆகிய பணிகளை மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலமாக புதைச் சாக்கடை திட்டப் பணிகள், குடிநீா்க் குழாய் பதிக்கும் பணிகள் மாநகரப் பகுதியில் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் நிறைவு பெற்ற இடங்களில் மாநகராட்சி சாா்பில் புதிய தாா்ச் சாலைகள் போடப்பட்டு வருகின்றன.
வட்டகரை சாலை, சைமன் நகா் 4 ஆவது குறுக்கு தெரு, அவ்வை சண்முகம் சாலை, ஆயுதப்படை மைதானம் முதல் குருசடி வரை உள்ள சாலைகளில் நடைபெற்ற சாலைப் பணிகளை மாநகராட்சி ஆணையா் பாா்வையிட்டு சாலையின் தரத்தை ஆய்வு செய்தாா்.
மேலும், பிற இடங்களிலும் சாலை பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், சாலைப் பணிகள் நடைபெற்ற இடங்களில் மழைநீா் வடிகால்களை சீரமைக்கவும் ஆணையா் உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, மாநகராட்சி பொறியாளா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
Image Caption
~ ~ ~
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...