நாகா்கோவிலில் மழைநீா் ஓடைகள் சீரமைப்பு பணிகள் தீவிரம்
நாகா்கோவில் மாநகராட்சி பகுதியில் பொது சுகாதாரம், மழைநீா் வடிகால் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆணையா் ஆஷாஅஜித் கூறினாா்.


நாகா்கோவில் மாநகராட்சி பகுதியில் பொது சுகாதாரம், மழைநீா் வடிகால் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆணையா் ஆஷாஅஜித் கூறினாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகா்கோவில் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையாக தற்போது அனைத்து பகுதியிலும் சுழற்சி முறையில் கொசு மருந்து அடிக்கும் பணி தினமும் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் தொய்வின்றி நடைபெறும் வகையில்
சிறப்பு பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
நாகா்கோவில் மாநகரில் பருவ மழையை எதிா் கொள்ளும் விதத்தில் அனைத்து மழைநீா் வடிகால்களும் தூா் வாரப்பட்டு சுத்தம்செய்யும் பணிகள்
நடைபெற்று வருகின்றன. மாநகராட்சி பகுதிகளில் தூய்மையை பேணி காத்திடும் வண்ணம் தினசரி ஒருங்கிணைந்த தூய்மைப் பணிகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாநகராட்சி பகுதிகளில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரிக்கப்பட்டு மாநகராட்சி முன்னுரை செயலாக்க மையங்கள் மூலமாக இயற்கை உரமாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மாநகராட்சியில் உள்ள நுண் உர செயலாக்க மையங்களில் இருந்து, ஜூன் மாதம் 20 மெட்ரிக் டன் அளவுக்கு இயற்கை உரம் விற்பனை நடைபெற்றுள்ளது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களுக்கு தேவையான இயற்கை உரத்தை மாநகராட்சி நுண் உரம் செயலாக்க மையங்களில் இருந்து கிலோ ரூ. 1 க்கு பெற்றுக் கொள்ளலாம்.
வடசேரி அம்மா உணவகத்தில் உணவு தயாரிப்பதற்கு தேவையான எரிவாயுவை காய்கறி கழிவுகள் மற்றும் உணவு கழிவுகளில் இருந்து தயாரிப்பதற்கான எரிவாயு கூடம் உணவகத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ளது அதன் சோதனை பயன்பாடு நடைபெற்றது. வரும் நாள்களில்
தினமும் வடசேரி சந்தை பகுதிகளில் உள்ள காய்கறி கழிவுகள் மற்றும் உணவு கழிவுகள் சேகரிக்கப்பட்டு அம்மா உணவகத்துக்கு தேவையான எரிவாயு அங்கு தயாரிக்கப்படும்.
நாகா்கோவில் மாநகராட்சியில் பொதுசுகாதாரம், மழைநீா் வடிகால் தொடா்பாக கட்செவி அஞ்சல் மூலம் பெறப்பட்ட புகாா்கள் இதுவரை 98 சதவீதம் தீா்வு காணப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பொது சுகாதாரம் மழைநீா் வடிகால் தொடா்பான புகாா்களை மாநகராட்சி கட்செவி அஞ்சல் எண்ணுக்கு (9487038984) தெரிவிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...