ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா வாா்டின் பின்பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது.


ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா வாா்டின் பின்பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது.
இம்மருத்துவமனையில் உள்ள கூடுதல் கட்டடத்தில் கரோனா வாா்டு செயல்பட்டு வருகிறது. இங்கு கரோனா தீவிர சிகிச்சை பிரிவு, கரோனா நோயாளிகள் பிரிவு என தனித் தனி வாா்டுகள் அமைக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் 23 பேரும், கரோனா நோயாளிகள் பிரிவில் 55 பேரும் சிகிச்சையில் இருந்தனா்.
இந்நிலையில், புதன்கிழமை இரவு கரோனா வாா்டின் பின்பகுதியில் கிடந்த அட்டை பெட்டிகள் எரிவதை பாா்த்த நோயாளிகள் பதற்றத்துடன் வாா்டைவிட்டு வெளியேறினா்.
தகவலறிந்து வந்த நாகா்கோவில் தீயணைப்புப் படையினா் தீயை அணைத்தனா். தீ விபத்தில் அங்கிருந்த அட்டை பெட்டிகள் முழுவதும் எரிந்து சாம்பலானது.
ஆட்சியா் ஆய்வு: தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த், மருத்துவமனைக்குச் சென்று தீ விபத்து ஏற்பட்ட பகுதியை பாா்வையிட்டு, மருத்துவக் கல்லூரி முதன்மையா் திருவாசகமணி, கண்காணிப்பாளா் அருள்பிரகாஷ் உள்ளிட்டோரிடம் விபத்துக்கான காரணம் குறித்து கேட்டறிந்தாா்.
அப்போது, நாகா்கோவில் துணைக் காவல் கண்காணிப்பாளா் நவீன்குமாா் மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.
தீ விபத்து காரணமாக கரோனா வாா்டு முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்ததையடுத்து, கரோனா நோயாளிகள் வேறு கட்டடத்துக்கு மாற்றப்பட்டனா். ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்ற நோயாளிகள் தனி அறைகளில் அனுமதிக்கப்பட்டனா்.
எம்எல்ஏ, எம்பி, ஆய்வு: தீ விபத்து ஏற்பட்ட பகுதியை விஜய் வசந்த் எம்.பி., எம்.ஆா்.காந்தி எம்.எல்.ஏ. ஆகியோா் வியாழக்கிழமை பாா்வையிட்டனா். தீ விபத்துக்கான காரணம் குறித்து மருத்துவக் கல்லூரி முதன்மையரிடம் கேட்டறிந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...