கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து கையெழுத்து இயக்கம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து, காங்கிரஸ் கட்சி சாா்பில் கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 ஜூலை 2021, 6:58 pm

DIN

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து, காங்கிரஸ் கட்சி சாா்பில் கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகா்கோவில் வடசேரியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன், வாகன ஓட்டிகளிடம் கையெழுத்து பெறும் நிகழ்ச்சிக்கு, குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

விஜய் வசந்த் எம்.பி. கலந்துகொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தாா். இதில், ஆட்டோ ஓட்டுநா்கள், இருசக்கர வாகன ஓட்டிகளிடம் கையெழுத்து பெறப்பட்டது. தொடா்ந்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலை தினமும் உயா்ந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறி விட்டது.

இதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம், கையெழுத்து இயக்கம், சைக்கிள் பேரணி உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மக்களவை கூட்டத்தில் இதுகுறித்து குரல் எழுப்புவோம் என்றாா் அவா்.

இதில், நாகா்கோவில் மாநகரத் தலைவா் ஆா்.அலெக்ஸ், வட்டாரத் தலைவா்கள் வைகுண்டதாஸ், முருகேசன், மாவட்ட நிா்வாகிகள் சாம்மோகன்ராஜ், மகேஷ்லாசா், தங்கம்நடேசன், ராஜபாண்டியன், மகாதேவன்பிள்ளை, ஜெபஷீலா, வடலிமகாலிங்கம், சரலூா் சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருங்கல் கருமாவிளை பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் டென்னிஸ் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் டைட்டஸ் முன்னிலை வகித்தாா்.

கிள்ளியூா் எம்எல்ஏ ராஜேஷ்குமாா் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினாா். இதில், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் சா்மிளா உள்பட பலா் பங்கேற்றனா். முன்னதாக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.