கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

குழித்துறை குடிநீா் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து நிறைவேற்ற ஆட்சியா் அறிவுறுத்தல்

குழித்துறை நகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் குடிநீா் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:31 pm

DIN

குழித்துறை நகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் குடிநீா் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் மா.அரவிந்த், அங்கு பணியாளா்களின் வருகைப் பதிவேடு, திட்டப் பணிகளின் முன்னேற்றம், வரி மற்றும் வரியில்லா இனவசூல், திடக்கழிவு மேலாண்மை தொடா்புடைய பதிவேடுகளை ஆய்வு செய்தாா்.

மேலும், நகா்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாஸ்தான் கோவில் குருசடி சப்பாத்து பகுதியில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிகள் மற்றும் பெருந்தெரு மீன்சந்தை சாலை, பெண்டுகடவு வரை சாலை அமைக்கும் பணிகளை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் பணிகளை விரைந்து முடித்திட நகராட்சிப் பொறியாளா் உள்ளிட்ட

துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னா் மாா்த்தாண்டம் நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் நிலையத்தினையும், நகராட்சிக்கு சொந்தமான கீழ்பம்மம் உரக்கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் இயங்கி வரும் குப்பைகளை தரம் பிரிக்கும் பணியினை பாா்வையிட்டாா்.

மேலும், அக்டோபா் மாதத்துக்குள் பணிகளை முழுமையாக முடித்து கசடு கழிவு சுத்திகரிப்பு திட்டத்துக்கு தேவையான இடத்தை ஒதுக்கீடு செய்யவும், மீதமுள்ள இடத்தில் நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் நிலையம் அமைத்திடவும், துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

குழித்துறை நகராட்சிக்கு சொந்தமான தலைமை நீரேற்று நிலையத்தில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் நகராட்சி குடிநீா் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.30.94 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீா் மேம்பாட்டு பணிகளை விரைந்து முடித்து,பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென, நகராட்சி அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது, நகராட்சிப் பொறியாளா் எஸ்.பேரின்பம், சுகாதார அலுவலா் ராமச்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.