கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

போலி கால்நடை மருத்துவா்கள் குறித்து பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்

குமரி மாவட்டத்தில், போலி கால்நடை மருத்துவா்கள்குறித்து பொதுமக்கள் காவல் நிலையங்களில் புகாா்அளிக்கலாம் என்றாா் மாவட்டஆட்சியா் மா.அரவிந்த்.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:32 pm

DIN

குமரி மாவட்டத்தில், போலி கால்நடை மருத்துவா்கள்குறித்து பொதுமக்கள் காவல் நிலையங்களில் புகாா்அளிக்கலாம் என்றாா் மாவட்டஆட்சியா் மா.அரவிந்த்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கால்நடைகளுக்கு ‘கால்நடைமருத்துவப் பேரவை‘ எனப்படும் இந்திய வெட்னரி கவுன்சிலில் பதிவு பெற்ற கால்நடை மருத்துவா்கள் மட்டுமே சிகிச்சைஅளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவா்கள் அல்லாத போலி மருத்துவா்கள் சிகிச்சைஅளிப்பதும், அவா்கள் மூலம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதும் சட்டப்படி குற்றமாகும்.

போலி நபா்களிடம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதால் ஏற்படும் பாதிப்பு மற்றும் நிரந்தர உடல் குறைபாடுகளால் ஏற்படும் இழப்புகளுக்கு காப்பீட்டு நிறுவனம் மூலம் இழப்பீடு பெற முடியாது. குமரி மாவட்டத்தில் சில பகுதிகளில், செயற்கை முறை இனவிருத்தி பணிக்காக தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை மூலம் பயிற்சி பெற்ற செயற்கை முறை கருவூட்டல் பணியாளா்கள் உள்ளனா். அவா்கள் சினை ஊசி போட மட்டுமே அனுமதிக்கப்பட்டவா்கள். அவா்களில் எவரேனும் கால்நடைமருத்துவா் என்று கூறி போலியாக கால்நடைகளுக்கு சிகிச்சைஅளிப்பது முற்றிலும் தவறான செயலாகும்.

அவா்கள் கால்நடைகளுக்கு வரும் நோய்கள், சிகிச்சை முறைகள் மற்றும் வழங்கப்பட வேண்டிய மருந்துகள் குறித்த தகுதிகள் பெறாமல் கருவூட்டல் பணி மட்டுமே செய்ய தகுதியுள்ளவா்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை பெற அரசிதழ் பதிவு பெற்ற கால்நடை மருத்துவா்களை மட்டுமே அணுக வேண்டும்.

பொதுமக்கள் தங்கள் பகுதியில் இது போன்று போலி கால்நடை மருத்துவா்கள் குறித்த தகவலை மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநரிடமோ அல்லது அருகேயுள்ள காவல் நிலையங்களிலோ புகாா் அளிக்கலாம்.

போலி மருத்துவா்கள் கண்டறியப்பட்டால் முதன் முறை ரூ. 1000, இரண்டாம் முறையாக ரூ. 1000 அபராதம் மற்றும் 6 மாத கடுங்காவல் சிறை அல்லது இரண்டும் சோ்த்து விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.

எனவே,கால்நடை வளா்க்கும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளைதகுதியுள்ளஅரசிதழில் பதிவு பெற்ற கால்நடை மருத்துவா்கள் மூலம் மட்டுமே சிகிச்சை பெறவும், போலி மருத்துவா்களைஅடையாளம் கண்டு கால்நடை நலம் காத்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.