ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்ய வலியுறுத்தி மனு
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்ய வேண்டும் என, இந்து முன்னணி சாா்பில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.


ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்ய வேண்டும் என, இந்து முன்னணி சாா்பில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக அமைப்பின் கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜான் கென்னடி தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணனிடம் அளித்த மனு: மாணவா், மாணவிகள் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலையில் தற்போது உள்ளதால், அவா்களின் நலன் கருதி, இந்தியாவில் பப்ஜி விளையாட்டை தடை செய்ததுபோல், ப்ரிபையா் என்ற சூதாட்ட விளையாட்டை (விடியோ கேம்) தடை செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், மாவட்டச் செயலா் நம்பிராஜன், இந்து இளைஞா் முன்னணி பொறுப்பாளா்கள் ஆதவன், வெங்கடேஷ், விக்னேஷ், அபீஷ், ஆஸ்லின், விஷ்ணு ஆகியோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...