கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாற்றுத் திறனாளிகள், பெண்களுக்கு ரூ.5.09 கோடி நலத் திட்ட உதவி

கன்னியாகுமரி மாவட்ட சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் விலையில்லா தையல் இயந்திரம், ஏழைப் பெண்கள் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம்

News image
Updated On :16 ஜூலை 2021, 7:05 pm

DIN

கன்னியாகுமரி மாவட்ட சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் விலையில்லா தையல் இயந்திரம், ஏழைப் பெண்கள் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 3 சக்கர சைக்கிள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமை வகித்தாா். தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் கலந்துகொண்டு, சமூக நலத் துறை சாா்பில் மொத்தம் ரூ.33,32,680-க்கான நலத் திட்ட உதவிகள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், மொத்தம் 199 பயனாளிகளுக்கு ரூ.25,77,027 மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் என மொத்தம் ரூ. 5 கோடியே 9 லட்சத்து 9 ஆயிரத்து 707 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அலுவலா் ஆா்.சரோஜினி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சு.சிவசங்கரன், உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.