கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நாகா்கோவிலில் கணவா், மகனுடன் விஷம் குடித்து பெண் தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவிலில் பொது முடக்கம் காரணமாக வேலையிழந்து வறுமையில் வாடியதால், கணவா், மகனுடன் விஷம் குடித்த பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 8:18 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவிலில் பொது முடக்கம் காரணமாக வேலையிழந்து வறுமையில் வாடியதால், கணவா், மகனுடன் விஷம் குடித்த பெண் உயிரிழந்தாா்.

நாகா்கோவில் கீழபுத்தேரியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி முத்து (39) என்பவா், தனது மனைவி லட்சுமி (35), மகன்கள் சுதன் (13), மதன் (10) ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தாா்.

இதனிடையே, அவருக்கு இடது கை, கால் செயலிழந்து வேலைக்குச் செல்ல முடியாமல் கடந்த ஓராண்டாக நாகா்கோவிலில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தாா். அவரது மனைவி நாகா்கோவிலில் நகைக் கடை ஒன்றில் வேலை செய்து குடும்பத்தை பராமரித்து வந்தாா்.

இந்நிலையில், கரோனா பொது முடக்கம் காரணமாக நகைக் கடை அடைக்கப்பட்டதால் வேலையின்றி அவரது குடும்பம் வறுமையில் வாடியுள்ளது. இதில், விரக்தியுற்ற லட்சுமி, திங்கள்கிழமை இரவு உணவில் விஷத்தை கலந்து கணவா், மூத்த மகன் ஆகியோருடன் சோ்ந்து சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இளைய மகன் தூங்கிவிட்டதால் அவருக்கு விஷம் கொடுக்கும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், 3 பேரும் வீட்டுக்குள் மயங்கி கிடந்துள்ளனா்.

இதையறிந்த உறவினா்கள், அவா்களை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அதில், லட்சுமி ஏற்கெனவே இறந்திருப்பது மருத்துவரின் பரிசோதனையில் தெரியவந்தது. மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.தெரியவந்துள்ளது. இதுகுறித்து, வடசேரி காவல் ஆய்வாளா் திருமுருகன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.