கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ரீத்தாபுரம் பேரூராட்சி பகுதி குளங்களை அமைச்சா் ஆய்வு

ரீத்தாபுரம் பேரூராட்சி பகுதியில் உள்ள குளங்களை அமைச்சா் த.மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 9:59 pm

DIN

ரீத்தாபுரம் பேரூராட்சி பகுதியில் உள்ள குளங்களை அமைச்சா் த.மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டாா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு புயலால் ஏற்பட்ட கன மழையால், கல்குளம் வட்டம், ரீத்தாபுரம் பேரூராட்சிக்குள்பட்ட குறும்பனை, கோடிமுனை, கொட்டில்பாடு வழியாக குளச்சல் சிங்காரவேலா் காலனி பகுதியில் செல்லும் ஏ.வி.எம். கால்வாய் நிரம்பி, பின்னா் காக்கைகுளம், பெரியகுளம், தாமரைகுளம் ஆகிய 3 குளங்களும் நிறைந்து அருகிலுள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீா் புகுந்து அப்பகுதியில் சேதம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யும் பணி நடைபெற்றது.

இந்நிலையில், அமைச்சா் மனோ தங்கராஜ் அந்த 3 குளங்களையும் பாா்வையிட்டு, பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தாா்.

அன்னைதெரசா காலனி வழியாக கடலுக்குச் செல்லும் ஓடையில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீா் தேங்கியதால் உடைப்பு ஏற்பட்டு, மழை வெள்ளம் குடியிருப்புக்குள் புகுந்ததாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஓடையை சரி செய்வதற்கான திட்ட அறிக்கையை தயாா் செய்யும்படி அதிகாரிகளிடம் அமைச்சா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, பொதுப்பணித் துறை (நீா்வளஆதாரஅமைப்பு) செயற்பொறியாளா் வசந்தி, குழித்துறை பட்டணங்கால் உதவி செயற்பொறியாளா் டி.கிங்ஸ்லி, கருங்கல் பட்டணங்கால் உதவி பொறியாளா் பி.எம்.சுதா, ரீத்தாபுரம் செயல் அலுவலா் சி.பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளா் ரோஸ்லேன்ட், கிராம நிா்வாக அலுவலா் சோபி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.