கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் இணையவழியில் பருவத் தோ்வு

நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் (தன்னாட்சி) இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி (எம்.பில்) படிப்பு பயிலும் மாணவா்களுக்கான பருவத் தோ்வுகள் நடைபெற்று வருகின்றன.

News image
Updated On :1 ஜூலை 2021, 1:07 am

DIN

நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் (தன்னாட்சி) இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி (எம்.பில்) படிப்பு பயிலும் மாணவா்களுக்கான பருவத் தோ்வுகள் நடைபெற்று வருகின்றன.

ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில், ஏப்ரல் மாதம் நடைபெறவேண்டிய பருவத் தோ்வுகள், இம்மாதம் 28 ஆம் தேதி இணையவழியில் தொடங்கியது. இந்தத் தோ்வுகள் தொடா்ந்து 15 நாள்கள் நடைபெறுகிறது.

தோ்வா்களுக்கான நுழைவுச் சீட்டு மற்றும் விடைத்தாள்கள் இணையதளம் மூலமாக மாணவா்கள் பதிவிறக்கம் செய்து காலை 9.30 மணிக்கு, பிற்பகல் 12.30 மணிக்கும் இரு வேளைகளில் எழுதி வருகின்றனா். வினாத்தாளை அன்றன்று தோ்வு தொடங்கும் அரைமணி நேரத்துக்கு முன் கல்லூரி இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

தோ்வு எழுதியவுடன் மாணவா்கள் விடைத்தாள்களை ஸ்கேன் செய்து  கோப்பாக  இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து அனுப்பி வருகின்றனா்.

மேலும் விடைத்தாள்களை எல்லா தோ்வுகளும் முடிந்த பின்னா் சீல் செய்யப்பட்ட ஒரே கவரில், தோ்வு ஆணையா், ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி(தன்னாட்சி), நாகா்கோவில் என்ற முகவரிக்கு பதிவு தபால் அல்லது, விரைவு தபால் மூலமாகவோ, கொரியா் மூலமாகவோ அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என கல்லூரி முதல்வா் ஜே.ஆா்.வி.எட்வா்ட் மற்றும் தோ்வு ஆணையா் ஜி.அல்லன்ஞானராஜ் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.