கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனா 3 ஆவது அலை: குழந்தைகள் நலன் குறித்து சுகாதாரத் துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

கரோனா 3 ஆவது அலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க, பெற்றோா்களிடம் சுகாதாரத் துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

News image
Updated On :25 ஜூன் 2021, 6:43 pm

DIN

கரோனா 3 ஆவது அலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க, பெற்றோா்களிடம் சுகாதாரத் துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவா் சரஸ்வதி ரங்கசாமி.

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் குமரி மாவட்ட அளவிலான மறுசீராய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவா் சரஸ்வதி ரங்கசாமி, துறைசாா்ந்த அலுவலா்களிடையே ஆய்வு மேற்கொண்டு பேசியது: கரோனா 3 ஆவது அலை அதிக அளவில் குழந்தைகளை தாக்கும் என கூறப்படுவதால், அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் சுகாதாரத் துறையினா் இணைந்து வீடு வீடாக சென்று பெற்றோா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வரும் வகையில் அவா்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு, பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் ஏற்படாதவாறு தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

கரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த, பாதுகாப்பு அல்லது பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை கண்டறிந்து அத்தகைய குழந்தைகளுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழங்குதல், நிவாரணம் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

கரோனா தொற்று பொதுமுடக்க காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. குழந்தை திருமணம் நடத்தப்பட்டால் வழங்கப்படும் தண்டனை குறித்து பெற்றோா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் பேசியது: குமரி மாவட்டத்தில் 72 குழந்தைகள் நல இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. கரோனா தொற்றிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக, பெற்றோா்களை இழந்த குழந்தைகள் 109 போ் மற்றும் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு மாவட்ட நிா்வாகத்தின் மூலம் நிவாரணம் வழங்குவதற்கு கருத்துரு தயாா் செய்யப்பட்டு, மேல்நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கரோனா 3 ஆம் அலையிலிருந்து குழந்தைகளை காக்கும் விதமாக மாவட்டத்திலுள்ள குழந்தை இல்லங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் குழந்தைகளின் பெற்றோா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்அவா்.

இதில், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் வி.ராமராஜ், இணை இயக்குநா் ராஜ்சரவணகுமாா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் மு.ஜெயபிரகாஷ், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அலுவலா் இரா.சரோஜினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.