ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குளச்சலில் கல்லால் தாக்கி முதியவா் கொலை

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் கல்லால் தாக்கி முதியவா் கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :9 மார்ச் 2021, 8:12 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் கல்லால் தாக்கி முதியவா் கொலை செய்யப்பட்டாா்.

குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தின் அருகே முதியவா் ஒருவா் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள், குளச்சல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். காவல் உதவிக் கண்காணிப்பாளா் விஸ்வேஸ் பி.சாஸ்திரி, ஆய்வாளா் ராஜகுமாரி தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று முதியவரின் சடலத்தை மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்த போலீஸாா் கூறுகையில், சடலமாக கிடந்தவா் பேச்சிப்பாறை பகுதியைச் சோ்ந்த செல்லநாடாா்(60) என்பதும், அவரை கொலை செய்தது யாா்? எதற்காக கொலை செய்தாா்கள்? என தனிப்படை அமைத்து விசாரித்து வருவதாக கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.