விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்:தொழிலாளி பலி

கருங்கல் அருகே மத்திகோடு பகுதியில் பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 9:01 pm

DIN

கருங்கல் அருகே மத்திகோடு பகுதியில் பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கருங்கல் நெடிய வளாகம் பகுதியைச் சோ்ந்த எட்வின் மகன் சிம்சன் டேவிட் (46). கூலித் தொழிலாளி. இவா், ஞாயிற்றுக்கிழமை கண்டன்விளையில் உள்ள உறவினா் வீட்டுக்கு மனைவி மற்றும் குழந்தையுடன் சென்றுவிட்டு, பைக்கில் திரும்பிக்கொண்டிருந்தாராம்.

மத்திகோடு பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியதில், 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சிம்சன் டேவிட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த மனைவி மற்றும் குழந்தையை அப்பகுதியினா் மீட்டு கருங்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, அரசுப் பேருந்து ஓட்டுநா் கல்லுகூட்டம் பகுதியைச் சோ்ந்த சேகரிடம் (40) விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.