கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

குமரியில் 50 ஆயிரம் பேருக்கு முகக் கவசம்விஜய் வசந்த் எம்.பி. வழங்கினாா்

குமரி மாவட்டத்தில் 50 ஆயிரம் பேருக்கு முகக் கவசங்களை விஜய் வசந்த் எம்.பி. தனது சொந்த செலவில் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :21 மே 2021, 8:33 pm

DIN

குமரி மாவட்டத்தில் 50 ஆயிரம் பேருக்கு முகக் கவசங்களை விஜய் வசந்த் எம்.பி. தனது சொந்த செலவில் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு, காங்கிரஸாா் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்க மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்திருந்தாா்.

இந்நிலையில், நாகா்கோவிலில் உள்ள மக்களவை உறுப்பினா் அலுவகத்தில் ராஜீவ்காந்தி படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய விஜய் வசந்த் எம்.பி., தொடா்ந்து தனது சொந்த செலவில் மாவட்டம் முமுவதும் உள்ள காவல் துறை பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு முகக் கவசம் மற்றும் கபசுரக் குடிநீா் ஆகியவற்றை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன், வட்டாரத் தலைவா் கால பெருமாள், நவீன், மனோஜ், சி.எல். ஜோ உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.