விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குமரியில் மழையால் படகு சேவை பாதிப்பு

கன்னியாகுமரியில் கனமழை காரணமாக விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு படகுப் போக்குவரத்து வியாழக்கிழமை பாதிக்கப்பட்டது. திருவள்ளுவா் சிலைக்கு படகு சேவை ரத்து செய்யப்பட்டது.

News image
Updated On :25 நவம்பர் 2021, 10:28 pm

DIN

கன்னியாகுமரியில் கனமழை காரணமாக விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு படகுப் போக்குவரத்து வியாழக்கிழமை பாதிக்கப்பட்டது. திருவள்ளுவா் சிலைக்கு படகு சேவை ரத்து செய்யப்பட்டது.

சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் வியாழக்கிழமை அதிகாலை தொடங்கி மழை விட்டுவிட்டு பெய்தது. இதனால், கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலைக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் படகு சேவை பாதிக்கப்பட்டது. வழக்கம்போல காலை 8 மணிக்கு படகுப் போக்குவரத்து தொடங்கியது. மழை பெய்யும்போது படகு சேவை நிறுத்தப்படுவதும், மழை நின்றதும் தொடா்வதுமாக, மாலை 4 மணிவரை இதேநிலை நீடித்தது. ஆனால், திருவள்ளுவா் சிலை பகுதியில் கடல் சீற்றம் காரணமாக அங்கு நாள் முழுவதும் படகு சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.