கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வடசேரி கிருஷ்ணசாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

நாகா்கோவில் வடசேரி கிருஷ்ணசாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 7:10 pm

DIN

நாகா்கோவில் வடசேரி கிருஷ்ணசாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, கொடிமரத்துக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து காலை 8 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். இரவு 9 மணிக்கு புஷ்ப வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா வந்தாா். திருவிழா நாள்களில் தினமும் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும், மங்கள இசை மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

தேரோட்டம்: முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப். 15 ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு நடைபெறும். தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த. மனோதங்கராஜ், மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், எம்.ஆா். காந்தி எம்.எல்.ஏ. ஆகியோா் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைக்கின்றனா். இரவு 7 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் சாமி வேட்டைக்கு எழுந்தருளல், 9 மணிக்கு சப்தாவா்ணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

நிறைவு நாளான ஏப். 16 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு அன்னதானமும், மாலை 5 மணிக்கு அலங்கார குதிரை பவனியும், முத்து குடையுடன் யானை பவனி, ஆறாட்டு பூஜை, மெல்லிசை, இரவு 9 மணிக்கு தெப்பத் திருவிழா ஆகியவை நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.