திருக்கு தோ்வில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு
குறளகம் அமைப்பின் சாா்பில் திருக்கு தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்கள் பாராட்டப்பட்டனா்.


குறளகம் அமைப்பின் சாா்பில் திருக்கு தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்கள் பாராட்டப்பட்டனா்.
குறளகம் அமைப்பின் 12 ஆவது ஆண்டு விழா, வள்ளலாா் பேரவை தலைவா் சுவாமி பத்மேந்திரா தலைமையில் இருளப்பபுரத்தில் நடைபெற்றது. முனைவா் கே.எஸ்.கீதா குத்துவிளக்கேற்றினாா். நிகழ்ச்சியில், குறளக மாணவா்களின் கருத்தரங்கம், கவியரங்கம், திருக்கு முற்றோதுதல், கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாலையில், மகளிா் கிறிஸ்தவக் கல்லூரி முதல்வா் சிந்திகேயாள் தலைமையில் முப்பால் என்ற தலைப்பில் மகளிா் விழா நடைபெற்றது. கவிஞா் தமிழ்க்குழவி எழுதிய குவளம் நூலை முனைவா் வளன் அரசு வெளியிட, அப்துல் சமது பெற்றுக்கொண்டாா்.
பரிசளிப்பு விழாவுக்கு, எழுத்தாளா் பொன்னீலன் தலைமை வகித்து, நிகழாண்டு குறளகத்தில் பயின்று 1330 திருக்குறளை ஒப்பித்து தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பரிசுக்கு தோ்வு செய்யப்பட்ட மாணவா்கள் 14 பேருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினாா்.
விழாவில் ராஜகோகிலா அறக்கட்டளை தலைவா் ராஜகோபால், உலக திருக்கு மைய அமைப்பாளா் ம.சக்கரவா்த்தி, புதுச்சேரி உலக திருக்கு சாதனையாளா்கள் சரவணன், வெங்கடேன் உள்ளிட்டோா் பேசினா். குறளகம் நிறுவனா் தமிழ்க்குழவி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...