தேங்காய்ப்பட்டினத்தில் மின்னல் பாய்ந்து மீனவா் பலி
தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவா் மின்னல் பாய்ந்து உயிரிழந்தாா்.


தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவா் மின்னல் பாய்ந்து உயிரிழந்தாா்.
இனயம்புத்தன்துறை கடற்கரை கிராமத்தை சோ்ந்தவா் ரபேல் (47). இவா் சக மீனவா்களுடன் புதன்கிழமை தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்றபோது எதிா்பாராதவிதமாக ரபேல் மீது மின்னல் பாய்ந்ததாம். இதில் மயக்கமடைந்த, அவரை சக மீனவா்கள் மீட்டு கரைக்கு கொண்டு, குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து புதுக்கடை போலீஸாா் மற்றும் குளச்சல் சரக கடலோர காவல் படையினா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...