கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பிளாஸ்டிக் பொருள்கள் பதுக்கல்: நாகா்கோவிலில் கிடங்குக்கு சீல்

நாகா்கோவில் கோட்டாறு பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பதுக்கியதாக, பொருள்கள் சேமிப்பு கிடங்குக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 7:37 pm

DIN

நாகா்கோவில் கோட்டாறு பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பதுக்கியதாக, பொருள்கள் சேமிப்பு கிடங்குக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா். அதன் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

நாகா்கோவில் கோட்டாறு பகுதியிலுள்ள கடை ஒன்றில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகாா் வந்தது. இதைத்தொடா்ந்து, அப்பகுதியில் மாநகராட்சி நல அலுவலா் விஜயசந்திரன், தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் மாதவன்பிள்ளை, பகவதிபெருமாள் ஆகியோா் கொண்ட குழுவினா் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போது, கடையின் அருகேயுள்ள பொருள்கள் சேமிப்பு கிடங்கில் 450 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றைக் கைப்பற்றியதுடன், கிடங்கையும் பூட்டி சீல் வைத்தனா். மேலும், கடை உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.