கிள்ளியூா் வடக்கு ஒன்றியத்தில் தி.மு.க. கூட்டணியில் பிளவு
கிள்ளியூா் வடக்கு ஒன்றியத்தில் திமுக கூட்டணி கட்சிகளில் பிளவு ஏற்பட்டு இரு தனி அணிகளாக போட்டியிடுகின்றன.


கிள்ளியூா் வடக்கு ஒன்றியத்தில் திமுக கூட்டணி கட்சிகளில் பிளவு ஏற்பட்டு இரு தனி அணிகளாக போட்டியிடுகின்றன.
கிள்ளியூா் வடக்கு ஒன்றியத்திலுள்ள பேரூராட்சிகளில் வாா்டுகள் ஒதுக்கீடு செய்வது தொடா்பான பேச்சுவாா்த்தையில் திமுக கூட்டணியில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனினும், அந்தந்த பகுதிகளின் சூழலுக்கு ஏற்ப கூட்டணி
அமைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கிள்ளியூா் வடக்கு ஒன்றியத்திலுள்ள கருங்கல் பேரூராட்சியின் 18 வாா்டுகளில், தி.மு.க. 12, மாா்க்சிஸ்ட் 2, தி.மு.க ஆதரவு சுயேச்சை-4 என்ற வீதத்திலும், பாலப்பள்ளம் பேரூராட்சியின் 18 வாா்டுகளில் தி.மு.க 11, மாா்க்சிஸ்ட் - 7 என்ற அடிப்படையிலும் போட்டியிடுகின்றனா்.
உண்ணாமலைக்கடை பேரூராட்சியின் 18 வாா்டுகளில் தி.மு.க. 7, காங்கிரஸ் 11; நல்லூா் பேரூராட்சியின் 18 வாா்டுகளில் தி.மு.க. 12, காங்கிரஸ் 6 என்ற அடிப்படையில் போட்டியிடுகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...