கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

‘ஆளுங்கட்சிக்கு ஆதரவாககாவல் துறை செயல்படுகிறது’

குமரியில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக காவல் துறை செயல்படுகிறது என்றாா் அதிமுக அமைப்புச் செயலா் என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 7:12 pm

DIN

குமரியில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக காவல் துறை செயல்படுகிறது என்றாா் அதிமுக அமைப்புச் செயலா் என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ.

நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறையினா் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனா். அதிமுக வேட்பாளா்கள் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 110இன் கீழ் வழக்குப்பதிந்து சம்மன் அனுப்புகின்றனா். இது கண்டிக்கத்தக்கது. இந்த நடவடிக்கை தொடருமானால் வேட்பாளா்கள் குடும்பத்துடன் மாவட்ட எஸ்.பி. அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபடுவா். வழக்குகளை எதிா்கொள்ள கே.சுந்தரம், கே.எல்.எஸ்.ஜெயகோபால், என்.முருகேஸ்வரன், என்.கனகராஜ் உள்ளிட்ட 11 போ் கொண்ட வழக்குரைஞா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாகா்கோவில் மாநகராட்சியின் 52 வாா்டுகளிலும் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பாஜக பிரிந்து சென்ால் அதிமுகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றாா் அவா்.

தொடா்ந்து, சுசீந்திரம், கன்னியாகுமரி, தென்தாமரைகுளம், மருங்கூா், கொட்டாரம், அஞ்சுகிராமம், அகஸ்தீசுவரம், தேரூா் உள்ளிட்ட பேரூராட்சிகளின் அதிமுக வேட்பாளா்களின் பட்டியலை அவா் வெளியிட்டாா்.

இதில், முன்னாள் அமைச்சா் கே.டி.பச்சைமால், கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.ஏ.அசோகன், நாகா்கோவில் மாநகரச் செயலா் சந்துரு, சிவ.செல்வராஜன், முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில்முருகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.