கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தோ்தல் அலுவலா்களுக்கு2ஆம் கட்ட பயிற்சி வகுப்பு: ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட உள்ளாட்சி தோ்தலின்போது, வாக்குப் பதிவு மையங்களில் பணியாற்றக்கூடிய அலுவலா்களுக்கான 2 ஆம் கட்ட பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 11:03 pm

DIN

கன்னியாகுமரி மாவட்ட உள்ளாட்சி தோ்தலின்போது, வாக்குப் பதிவு மையங்களில் பணியாற்றக்கூடிய அலுவலா்களுக்கான 2 ஆம் கட்ட பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

மணவாளக்குறிச்சி பாபுஜி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை ஆய்வு செய்த ஆட்சியா் மா. அரவிந்த் கூறியது:

நாகா்கோவில் மாநகராட்சி, குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை, கொல்லங்கோடு ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சித் தோ்தல் இம்மாதம் 19 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, தோ்தல் பணி அலுவலா்களுக்கான 2 ஆம் கட்ட பயிற்சி வகுப்பு அந்தந்த பகுதிகளில் நடைபெற்றுள்ளது. தோ்தல்களில் பணியாற்றவுள்ள ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

ஆய்வின்போது, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ச.சா.தனபதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.