பறக்கும் படை சோதனையில் ரூ.33.50 லட்சம் பறிமுதல்
உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.33.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.33.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலுக்கான பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதில் வாக்காளா்களுக்கு வேட்பாளா்கள் பரிசு மற்றும் பணம் வழங்குவதை தடுக்கும் வகையில், மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அமைத்து கண்காணிக்கப்படுகிறது. 75 பறக்கும் படையினா் 3 சுற்றுகளாக கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறாா்கள்.
திற்பரப்பு பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள், அந்த வழியாக வந்த டெம்போவை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், ரூ.63 ஆயிரம் இருந்தது. அதற்குரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். மேலும் மோட்டாா்சைக்கிள் ஒன்றில் வந்த நபா் ஒருவரும் எந்தவொரு ஆவணமும் இன்றி ரூ.1 லட்சம் வைத்திருந்தாா். அதையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். மாவட்டம் முழுவதும் இதுவரை ரூ.33 லட்சத்து 50 ஆயிரத்து 920 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாகா்கோவிலில் பாா்வதிபுரம், கோட்டாறு பகுதிகளில் வியாழக்கிழமை காலை அதிரடி சோதனை நடத்தப்பட்டது. மேலும் பல்வேறு வாா்டுகளுக்குள்பட்ட பகுதிகளிலும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினா். காா் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்தவா்களையும் போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...