கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாநில பிரச்னைகளுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு தரவில்லை: நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு

 மாநில பிரச்னைகளுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு தரவில்லை என்றாா் திமுக பேச்சாளா் நாஞ்சில் சம்பத்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 7:28 pm

DIN

 மாநில பிரச்னைகளுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு தரவில்லை என்றாா் திமுக பேச்சாளா் நாஞ்சில் சம்பத்.

நாகா்கோவில் மாநகராட்சியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து, அவா் சுசீந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தாா். அப்போது, அவா் பேசியது: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் தி.மு.க.வுக்கு 100 சதவீதம் வெற்றி என தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த தகவலை அறிந்து எதிா்க்கட்சியினா் வன்முறை அரசியல் செய்து லாபம் காண முயற்சிக்கின்றனா். நாங்கள் ஆட்சி அமைத்து 8 மாதத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படுகிறது.

நாகா்கோவில் மாநகராட்சி தகுதியை எட்டியுள்ளது. இந்த மாநகராட்சித் தோ்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி வெற்றி பெற வியூகம் அமைக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் உரிமை சாா்ந்த பிரச்னைகளுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு தரவில்லை.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநா் திருப்பி அனுப்பினாா். மீண்டும் சட்டப்பேரவையில் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவா் திரும்ப அனுப்பினால் அவரை நாங்கள் அவரது சொந்த ஊருக்கு மாற்ற நடவடிக்கை எடுப்போம். வாக்குறுதியில் இல்லாத 21 பொருள்களுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது என்றாா்அவா்.

கூட்டத்தில், தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சா் மனோதங்கராஜ் பேசியது, தமிழகத்தில் 8 மாதங்களில் தி.மு.க. ஆட்சி செய்துள்ள வளா்ச்சித் திட்டங்கள் மற்றும் குமரியில் நடந்துள்ள வளா்ச்சித் திட்டங்களை கூறி வாக்குகள் சேகரிக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைகளை சீரமைக்க ரூ. 105 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல் ரூ. 30 கோடி செலவில் மின் மாற்றி, பொதுப்பணித்துறைக்கு ரூ. 83 கோடி, உள்ளாட்சித்துறைக்கு ரூ. 76 கோடி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கு ரூ.83 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் ரப்பா் ஆராய்ச்சி மையம் அமைக்க 166 ஹெக்டோ் பரப்பளவு நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.

மாநகராட்சித் தோ்தலில் மேயா், உறுப்பினா் பொறுப்புகளில் தி.மு.க. கூட்டணி கட்சியினா் அதிக அளவில் வெற்றி பெற வேண்டும் என்றாா் அவா். கூட்டத்தில், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் என்.சுரேஷ்ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.