இளைஞா்களுக்கு தொழில் திறன் பயிற்சி நாளை தோ்வு முகாம்
குமரி மாவட்டத்தில், படித்த இளைஞா்களுக்கு தொழில் திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


குமரி மாவட்டத்தில், படித்த இளைஞா்களுக்கு தொழில் திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இது குறித்து, மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் இளைஞா்களுக்கு தொழில் திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுப்பதற்கு பயிற்சி நிறுவனங்கள் மூலம் இளைஞா்களை ஒருங்கிணைத்து தோ்வு செய்யும் அணி திரட்டல் முகாம், நாகா்கோவில் வடசேரி பூமாலை வணிக வளாகத்தில் பிப். 26 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், தக்கலை ஊராட்சி ஒன்றியம் வட்டார இயக்க மேலாண்மை அலகில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடைபெறுகிறது. முகாமில் மத்திய அரசால் அனுமதி பெற்ற பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு இளைஞா்களை தோ்வு செய்ய உள்ளனா்.
முகாமில் குமரி மாவட்டத்தைச் சோ்ந்த 5 ஆம் வகுப்பு முதல் தொழிற்பயிற்சி (ஐடிஐ), பட்டப் படிப்பு, டிப்ளமோ இன் பாா்மஸி, நா்சிங், அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை (கலை, அறிவியல் மற்றும் பொறியியல்) வரை படித்த 35 வயதுக்குள்பட்ட ஆண், பெண் இருபாலரும் தங்களது கல்விச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், குடும்ப அட்டை, இதர தகுதிச் சான்று (அசல் மற்றும் நகல்) மற்றும் புகைப்படங்களுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...