28 இல்பொதுமக்கள் குறைதீா் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை (பிப்.28) நடைபெறுகிறது.


கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை (பிப்.28) நடைபெறுகிறது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குமரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வந்த மக்கள் குறை தீா்க்கும் நாள்கூட்டம் மீண்டும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பிப். 28 ஆம் தேதியன்று காலை 10 மணி முதல் முற்பகல் 1 மணி வரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள லூயி பிரைலி கூட்ட அரங்கில் வைத்து நடைபெற உள்ளது.
கரோனா தொற்று காலத்தை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அரசு நிலையான நெறிமுறைகளை வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியினை கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
முதியோா், சிறுவா்கள் மற்றும் காய்ச்சல் அறிகுறி உடையவா்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதை தவிா்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...