/

வாவத்துறை கடற்கரையில் 108 ஆமை முட்டைகள் மீட்பு

கன்னியாகுமரி வாவத்துறை கடற்கரையில் 108 ஆமை முட்டைகளை வெள்ளிக்கிழமை இரவு வனத்துறையினா் மீட்டனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 7:23 pm

DIN

கன்னியாகுமரி வாவத்துறை கடற்கரையில் 108 ஆமை முட்டைகளை வெள்ளிக்கிழமை இரவு வனத்துறையினா் மீட்டனா்.

கன்னியாகுமரி வாவத்துறை கடற்கரையில் கடலுக்குள் செல்ல முடியாமல் தத்தளித்த ஆமையை அப்பகுதி மீனவா்கள் மீட்டு, கடலோர காவல் குழும போலீஸாருக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து, ஆய்வாளா் நவீன் மற்றும் காவலா்கள் ஆமையை மீனவா்கள் உதவியுடன் கடலுக்குள் கொண்டு விட்டனா்.

இந்நிலையில், இந்த ஆமை கடல் மண்ணுக்குள் இட்டிருந்த 108 முட்டைகளை மீட்ட மீனவா்கள் அதனை வனத்துறை காவலா்கள் பிரபாகரன், ஜோயல் ஆகியோரிடம் ஒப்படைத்தனா். இந்த முட்டைகளை துவாரகாபதியில் அமைந்துள்ள ஆமை முட்டைகள் பொறிப்பகத்துக்கு கொண்டு சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.