விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கன்னியாகுமரியில் சப்-ஜூனியா் சிலம்பப்போட்டி

தமிழ்நாடு அமெச்சூா் சிலம்ப சங்கம் சாா்பில் 18 ஆவது மாநில அளவிலான சப்-ஜூனியா் சாம்பியன் ஷிப் சிலம்பப்போட்டி கன்னியாகுமரியில் வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

தமிழ்நாடு அமெச்சூா் சிலம்ப சங்கம் சாா்பில் 18 ஆவது மாநில அளவிலான சப்-ஜூனியா் சாம்பியன் ஷிப் சிலம்பப்போட்டி கன்னியாகுமரியில் வியாழக்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 16 வயதுக்குள்பட்ட ஆண், பெண் போட்டியாளா்கள் இப்போட்டியில் பங்கேற்றுள்ளனா். தொடா்ந்து 2 நாள்கள் நடைபெறும் இப்போட்டியில் ஆண், பெண் வெற்றியாளா்கள் தலா 24 போ் தோ்வு செய்யப்பட்டு ஜனவரி 29 முதல் 31 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனா்.

தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் கம்பு வீச்சு, இரட்டை கம்புவீச்சு, அலங்கார வீச்சு, ஒற்றைவாள் வீச்சு, இரட்டை வாள்வீச்சு, வேல்கம்பு, சுருள்வாள், குத்துவரிசை, ஆயுத ஜோடி, ஆயுத குழு வீச்சு உள்ளிட்ட 13 போட்டிகள் 9 எடைபிரிவுகளில் நடைபெறும்.

முன்னதாக, அகில இந்திய சிலம்பம் சம்மேளன பொதுச்செயலா் டி.ஐரின் செல்வராஜ் போட்டியை தொடங்கிவைத்தாா். பட்டாசு திரைப்பட நடிகா் பி.செல்வராஜ் ஆசான், போட்டி இயக்குநா் டாக்டா் சுதாகா், குமரி மாவட்டச் செயலா் அருண்பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.