விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குமரி விவேகானந்த கேந்திரத்தில் ரூ. 15 கோடியில் அவைக்கூடம்: தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி திறந்துவைத்தாா்

ரூ.15 கோடியில், சுவாமி விவேகானந்தா சபாகிரகம் என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள புதிய அவைக்கூடத்தை தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 7:41 pm

DIN

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் ரூ.15 கோடியில், சுவாமி விவேகானந்தா சபாகிரகம் என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள புதிய அவைக்கூடத்தை தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

இவ்விழாவுக்கு, அகில பாரத ஆா்.எஸ்.எஸ். தலைவா் மோகன் பாகவத் தலைமை வகித்தாா். விவேகானந்த கேந்திரத் தலைவா் ஏ.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். கேந்திர பொதுச்செயலா் பானுதாஸ் வரவேற்றாா். தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, புதிய அவைக்கூடத்தையும், அன்னபூரணா என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள உணவருந்தும் கூடத்தையும் திறந்துவைத்தாா். வெள்ளிமலை விவேகானந்த ஆசிரமத் தலைவா் சுவாமி சைதன்யானந்த ஜி மகராஜ் ஆசியுரை வழங்கினாா்.

இதில், முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், என்.தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து ஆளுரும், ஆா்.எஸ்.எஸ். தலைவரும் பிற்பகல் 1.30 மணிக்கு காா் மூலம் தூத்துக்குடிக்கு சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.