கோவளம் தூண்டில் வளைவு பணியைத் தொடங்கக் கோரி மனு
கன்னியாகுமரியை அடுத்த கோவளத்தில் தூண்டில் வளைவு பாலத்துக்கான பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி தமிழக மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணனிடம் மனு அளிக்கப்பட்டது.


கன்னியாகுமரியை அடுத்த கோவளத்தில் தூண்டில் வளைவு பாலத்துக்கான பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி தமிழக மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணனிடம் மனு அளிக்கப்பட்டது.
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபா் ஆன்றனி அல்காந்தா், மாவட்ட திமுக செயலா் என்.சுரேஷ்ராஜன் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனை சந்தித்து அளித்த மனு:
சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்துக்கு செல்லும் புறவழிச்சாலை அமைக்கவும், ஏற்கெனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி பெரியநாயகி தெரு மற்றும் கோவளம் பகுதிகளுக்கான தூண்டில் வளைவு பாலப் பணிகளை உடனடியாக தொடங்கவும், சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் விசைப்படகுகள் கடலில் தடையின்றி மீன் பிடிக்க அனைத்து வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
மனு அளிக்கும்போது, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் என்.தாமரை பாரதி, கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குப் பேரவை துணைத் தலைவா் செல்வராணி ஜோசப் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...