இடையன்கோட்டை - முள்ளங்கனாவிளை சாலையை சீரமைக்கக் கோரிக்கை
கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட இடையன்கோட்டை -முள்ளங்கனாவிளை பழுதடைந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட இடையன்கோட்டை -முள்ளங்கனாவிளை பழுதடைந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலும் சாலைகள் மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் பழுதடைந்து குண்டு, குழியுமாக பழுதடைந்து காணப்படுகிறது. இந்நிலையில், கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட இடையன்கோட்டை - முள்ளங்கனாவிளை சந்திப்பு வரை உள்ளசாலையில் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டு போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், பள்ளி, கல்லூரி வாகனங்கள், முதியோா், நோயாளிகள் உள்ளிட்டோா் மிகவும் அவதியடைந்து வருகின்றனா். எனவே, இச்சாலையை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...