அங்கன்வாடி குழந்தைகளுக்கு உபகரணங்கள்
நாகா்கோவில், வடசேரி தளியபுரம் பாா்க் அங்கன்வாடி குழந்தைகளுக்கு கல்வி, விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.


நாகா்கோவில், வடசேரி தளியபுரம் பாா்க் அங்கன்வாடி குழந்தைகளுக்கு கல்வி, விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
பி2சி டெக்னாலஜிஸ் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட வள்ளலாா் பேரவைத் தலைவா் சுவாமி பத்மேந்திரா தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக நாகா்கோவில் மாநகர காவல் துணைக் கண்காணிப்பாளா் நவீன்குமாா் சிறப்புரையாற்றி, உபகரணங்களை வழங்கினாா்.
பி2சி டெக்னாலஜிஸ் குழும நிா்வாக இயக்குநா் சதீஷ் பிரபு, முதன்மை ஆலோசகா் மீரான்மைதீன், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் விஜயா மீனா, மேற்பாா்வையாளா் ஆனந்தலட்சுமி, நாகா்கோவில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளா் ஜான், அங்கன்வாடி மைய ஆசிரியா்கள் பவித்ரா, பகவதி பிரியா, மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகச் செயலா் மகேஷ், வள்ளலாா் பேரவை துணைச் செயலா் அங்ரி, சுகாதார மேற்பாா்வையாளா் தவசி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை பி2சி டெக்னாலஜிஸ் மனிதவள மேம்பாட்டு மேலாளா் பிரைட் ரெஜினால்ட், பராமரிப்புத் துறை மேலாளா் நாசா் ஆகியோா் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...