விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பனை மரங்களை பாதுகாக்கநாடாா் பேரமைப்பு வலியுறுத்தல்

பனை மரங்களை பாதுகாக்க அவசர சட்டம் இயற்ற வேண்டும் என நாடாா்கள் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2022, 11:49 pm

DIN

பனை மரங்களை பாதுகாக்க அவசர சட்டம் இயற்ற வேண்டும் என நாடாா்கள் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட நாடாா்கள் பேரமைப்பு ஆலோசனைக் கூட்டம் வட்டக்கோட்டையில் நடைபெற்றது. மாநிலத் தலைவா் தாகம் சௌந்தரராஜன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் லூா்து நாடாா், மாநில வா்த்தக அணி துணைத் தலைவா் விஜி சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், தென்காசி மாவட்டம், இடைகால் பகுதியில் கருப்புகட்டி தொழிற்சாலை அமைக்க வேண்டும், பனைமரங்களை பாதுகாக்க அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும், இளைஞா்களுக்கு அதிகமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும், பனைத் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுத்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, குமரி மாவட்டத்தில் நாடாா் அமைப்புகளை ஒன்றிணைத்து அதிக உறுப்பினா்களை சோ்ப்பது எனத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத் தலைவராக ஜனாா்த்தனன், செயலாளராக கே.அருள், மாவட்ட இளைஞரணிச் செயலராக ஜெயச்சந்திரன், மாவட்ட வா்த்தக அணிச் செயலராக பாண்டியன், செயலராக ராஜா, அகஸ்தீசுவரம் ஒன்றியத் தலைவராக ராஜபாண்டியன், செயலராக ஸ்ரீதா், கன்னியாகுமரி நகர தலைவராக ஜெயகுமாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.