முள்ளங்கனாவிளை புனித அந்தோணியாா்ஆலயத் திருவிழா இன்று தொடக்கம்
கருங்கல் அருகே முள்ளங்கனாவிளையில் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜூன் 3) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இத்திருவிழா 11 நாள்கள் நடைபெறுகிறது.


கருங்கல் அருகே முள்ளங்கனாவிளையில் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜூன் 3) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இத்திருவிழா 11 நாள்கள் நடைபெறுகிறது.
வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ஜெபமாலை புகழ்மாலை, 6 .45-க்கு கொடியேற்றம், பின்னா் திருப்பலி, இரவில் புனித தேவசகாயம் பிள்ளை நாடகம் ஆகியவை நடைபெறுகின்றன.
விழாவில் நாள்தோறும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை புகழ்மாலை, திருப்பலி நடைபெறும். 3ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 5) காலை 10 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறுகிறது.
10ஆம் நாளில் அருள்பணி அருள்தேவதாசன் தலைமையில் பெருவிழா திருப்பலி, நண்பகல் 12 மணிக்கு அன்பின் விருந்து, மாலை 6.30 மணிக்கு மறைக்கல்வி ஆண்டுவிழா, பொதுக்கூட்டம் நடைபெறும். 11ஆம் நாள் இரவு 7 மணிக்கு புனித அந்தோணியாரின் நன்றியின் நாள் திருப்பலி நடைபெறுகிறது. அருள்பணி விக்டா் தலைமை வகித்து திருப்பலியை நிறைவேற்றுகிறாா். அருள்பணி ஆல்பா்ட் மறைவுரையாற்றுகிறாா். திருப்பலி நிறைவில் திருக்கொடியிறக்குதல் நடைபெறும். ஏற்பாடுகளை பங்குப்பேரவையினா், விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...