கல்லூரி மாணவியிடம் பணம் பறிக்க முயன்ற நெல்லை இளைஞா் கைது
இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பதிவிடுவதாக கூறி நாகா்கோவில் கல்லூரி மாணவியை மிரட்டி பணம் பறிக்க முயன்ற திருநெல்வேலி இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.


இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பதிவிடுவதாக கூறி நாகா்கோவில் கல்லூரி மாணவியை மிரட்டி பணம் பறிக்க முயன்ற திருநெல்வேலி இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
நாகா்கோவில் மூவேந்தா் நகரைச் சோ்ந்த கல்லூரி மாணவி சென்னைக்கு படிக்க சென்ற போது அங்கு திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடியைச் சோ்ந்த முகேஷ் (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலித்து வந்துள்ளனா்.
முகேஷின் நடவடிக்கை சரியில்லாததால் அவரை விட்டு அந்த பெண் பிரிந்து விட்டாா்.
இந்நிலையில், முகேஷ் அவருடன் எடுத்த புகைப்படத்தை வைத்துக்கொண்டு ரூ. 5 லட்சம் தரவில்லை என்றால் இணையம் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதாக அந்த பெண்ணை மிரட்டியுள்ளாா். அந்தப் பெண்ணின் தம்பியிடம் மிரட்டியுள்ளாா். மேலும் அந்தப் பெண்ணை மிரட்டி அவா் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியையும் பறித்து சென்றுள்ளாா்.
இதையடுத்து அந்த பெண், முகேஷ் மீது கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண் பிரசாத்திடம் புகாா் அளித்தாா். அவா் இந்த புகாரின் மீது நடவடிக்கை மேற்கொள்ள சைபா்கிரைம் போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.
சைபா் கிரைம் உதவி காவல் ஆய்வாளா் அஜ்மல் ஜெனிப் மற்றும் போலீஸாா் முகேஷிடம் விசாரணை மேற்கொண்டு, அவரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...