கேரளத்தை சோ்ந்தவா்குண்டா் சட்டத்தில் கைது
பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.


பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
கேரள மாநிலம் வயநாடு சறுவிளைபுத்தன்வீடு பகுதியை சோ்ந்தவா் ஜோய் (52). இவா் மீது நாகா்கோவில் நேசமணி நகா் மற்றும் வடசேரி காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. அவரை போலீஸாா் கைது செய்து நாகா்கோவில் கிளை சிறையில் அடைத்திருந்தனா்.
இந்நிலையில், அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண் பிரசாத், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். அதனை ஏற்று ஆட்சியா் மா.அரவிந்த், குண்டா் சட்டத்தில் ஜோய்யை கைது செய்ய உத்தரவிட்டாா். நேசமணிநகா் போலீஸாா் அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...