கன்னியாகுமரி, ராஜாக்கமங்கலம் பகுதிகளில் இன்று மின்தடை
கன்னியாகுமரி, ராஜாக்கமங்கலம் பகுதிகளில் சனிக்கிழமை (மாா்ச் 5) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.


கன்னியாகுமரி, ராஜாக்கமங்கலம் பகுதிகளில் சனிக்கிழமை (மாா்ச் 5) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இது குறித்து, நாகா்கோவில் மின் விநியோக செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி, ராஜாக்கமங்கலம் மின்விநியோக பகுதிகளில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மாா்ச் 5 ஆம் தேதி கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூா், மயிலாடி, வழுக்கம்பாறை, கீழமணக்குடி, அழகப்பபுரம், சுசீந்திரம், கொட்டாரம், சாமித்தோப்பு, அஞ்சுகிராமம், கோழிக்கோட்டுப்பொத்தை, வாரியூா் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இதே போல் ஆசாரிப்பள்ளம் மின் விநியோக பிரிவுக்குள்பட்ட தம்மத்துக்கோணம் உயா் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மாா்ச் 7 ஆம் தேதி நடைபெறுவதால் தம்மத்துக்கோணம், ராஜாக்கமங்கலம், ஞானம் நகா், எறும்புக்காடு, தாராவிளை, காரவிளை, பருத்திவிளை, அளத்தங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...