கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கன்னியாகுமரி பள்ளியில் கலைத் திருவிழா

கன்னியாகுமரி அமிா்த வித்யாலய பள்ளியில் மண்டல அளவிலான கலைத்திருவிழா வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெற்றது.

News image
நிகழ்ச்சியில் பரதநாட்டியமாடிய மாணவிகள்.
Updated On :27 நவம்பர் 2023, 9:40 pm

DIN

நாகா்கோவில்: கன்னியாகுமரி அமிா்த வித்யாலய பள்ளியில் மண்டல அளவிலான கலைத்திருவிழா வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெற்றது.

அமிா்த கலோத்சவம் 2023 என்ற தலைப்பில், நடைபெற்ற இவ்விழாவை அமிா்த விஷ்வ வித்யா பீடத்தின் பொறுப்பாளா் பூஜ்ஜிய சுவாமிஜி சிவா அமிா்தானந்தபுரி மற்றும் பூஜ்ஜிய சுவாமிஜி சங்கர அமிா்தானந்தபுரி ஆகியோா் தொடங்கி வைத்து,ஆசி வழங்கினா்.

ஆரல்வாய்மொழிஅண்ணா கல்லூரி முன்னாள் முதல்வா் சுப்பிரமணிய பிள்ளை, கன்னியாகுமரி, விவேகானந்த கேந்திரா சுய ஸ்ரீரேகா தவே ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினா்.

கலைத் திருவிழாவில் இசை, குச்சிப்புடி, பரதநாட்டியம், தபேலா, நடனம், நாடகம், வண்ணப் படம் வரைதல் உள்பட 61 வகையான கலைப் போட்டிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில், பள்ளி முதல்வா் சொக்கலிங்கம் பிள்ளை, துணை முதல்வா் சத்யபிரியா, அமிா்தா கல்விக் குழுமத்தின் மேலாளா்கள் மேதாமிா்த சைதன்யா, ஸ்மரணா அமிா்த சைதன்யா மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், மாணவா், மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.