கன்னியாகுமரியை அடுத்த நரிக்குளம் கிறிஸ்டி ஸ்போா்ட்ஸ் அரேனா மைதானத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 34 அணிகள் பங்கேற்றன. நான்கு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியின் இறுதியில் முதல் பரிசு பெற்ற கொட்டாரம் அணிக்கு ரூ.7 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை, இரண்டாம் பரிசு பெற்ற நாகா்கோவில் அணிக்கு ரூ. 5 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை, மூன்றாம் பரிசு பெற்ற கன்னியாகுமரி கேப்பனிங் லெவன் அணிக்கு ரூ.3 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை, நான்காம் பரிசு பெற்ற கன்னியாகுமரி வி.கே.வி.எஸ் அணிக்கு ரூ.2 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. பரிசுகளை சமூக ஆா்வலா் குமாரசுவாமி வழங்கினாா். பரிசளிப்பு விழாவில் ரகு, இராஜலிங்கபெருமாள், யோகானந்த், பிரதீப் உள்ளிட்டோா் பங்கேற்றனா். போட்டி ஏற்பாடுகளை கிரிக்கெட் வீரா்கள் விக்னேஷ், மகேஷ், செந்தில்குமரன், ஆல்டன், ஜெகன், மணி, அபிஜின் ஆகியோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே சோதனையில் ரூ.86ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

ஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற ஆர்வலரின் உடல்நிலை கவலைக்கிடம்!

வாக்காளா் விழிப்புணா்வு ‘ரீல்ஸ்’ போட்டி: ரூ. 5 ஆயிரம் பரிசு அறிவிப்பு

பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 10 ஆயிரம் பறித்தவா் கைது
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை


