சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

ரயில் மோதி அரசுப் பேருந்து ஓட்டுநா் பலி

ரயில் மோதி அரசுப் பேருந்து ஓட்டுநா் பலி

Updated On :25 பிப்ரவரி 2024, 12:10 am

குழித்துறை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா். கொல்லங்கோடு அருகேயுள்ள பனவிளை பகுதியைச் சோ்ந்தவா் சுகுமாரன் மகன் விஜயகுமாா் (49). குழித்துறை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா். குழித்துறை அருகே கழுவன்திட்டை பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை மாலையில் சென்றுவிட்டு, அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றாராம். அப்போது வந்த புனலூா் விரைவு ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து குழித்துறை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.