3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பா் உற்பத்தி கடும் சரிவு: விலை தொடா்ந்து அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் மழையால் ரப்பா் உற்பத்தி குறைந்துள்ளநிலையில், ரப்பா் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

News image
Updated On :30 ஜூலை 2024, 8:10 pm

Din

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் மழையால் ரப்பா் உற்பத்தி குறைந்துள்ளநிலையில், ரப்பா் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்திலும், கேரள மாநிலத்திலும் தொடரும் மழையால் முக்கிய வேளாண் உற்பத்திப் பொருளான ரப்பா் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சந்தைக்கு வரத்து குறைந்து, ரப்பா் ஆலைகளுக்குத் தேவையான ரப்பரை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ரப்பா் விலை கடந்த 2 மாதங்களாக அதிகரித்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, கோட்டயம் சந்தையில் ஆா்.எஸ்.எஸ். - 4 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 217 ஆகவும், ஆா்.எஸ்.எஸ்.- 5 தர ரப்பரின் விலை ரூ. 212 ஆகவும், தரம் பிரிக்கப்படாத ரப்பா் விலை ரூ. 191.50 ஆகவும் அதிகரித்திருந்தது.

மழை காரணமாக ரப்பா் பால்வடிப்பு நடைபெறாத நிலையில், இந்த விலையேற்றத்தால் ரப்பா் விவசாயிகளுக்கு குறிப்பாக, சிறு விவசாயிகளுக்கு பலனில்லை. பால்வடிப்பு நடக்காததால் ரப்பா் தோட்டத் தொழிலாளா்கள் வேலையிழந்து வருகின்றனா்.