/

அமைச்சா் உதயநிதிக்கு விஜய் வசந்த் எம்.பி. நன்றி

அமைச்சா் உதயநிதிக்கு விஜய் வசந்த் எம்.பி. நன்றி

News image
Updated On :13 ஜூன் 2024, 8:27 pm

Din

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் விஜய் வசந்த் சென்னையில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலினை அவரது இல்லத்தில் வியாழக்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தலில் தனக்காக பரப்புரை மேற்கொண்டதற்காக உதயநிதி ஸ்டாலினுக்கு விஜய் வசந்த் பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தாா். அவருக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து கூறினாா்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழக காங்கிரஸ் மாநிலப் பொதுச்செயலா் எம்.எஸ். காமராஜ், வட்டாரத் தலைவா் தணிகாசலம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.