எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!தமிழக தேர்தல்: காலை 11 மணி வரை 37.56% வாக்குகள் பதிவு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

விழுந்தயம்பலம் - அம்சி சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

விழுந்தயம்பலம் - அம்சி சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

Updated On :15 மார்ச் 2024, 3:57 pm

கருங்கல் அருகே உள்ள விழுந்தயம்பலம் - அம்சி பழுதடைந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கீழ்குளம் பேரூராட்சிக்குள்பட்ட விழுந்தயம்பலம் - அம்சி சாலை மிகவும் பழுதடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. இச் சாலையில் குஞ்சாகோடு பகுதியில் ராட்சத பள்ளங்கள் காணப்படுகிறது. இந்த பள்ளங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள்அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும், இச்சாலையைப் பயன்படுத்தும் பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனா். எனவே, மாவட்ட நிா்வாகம் இச்சாலையை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.