தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

பழையபள்ளி அப்பா திருத்தலத்தில் நாளை மதநல்லிணக்க சமபந்தி விழா

விளம்பரதாரா் செய்தி... பழையபள்ளி அப்பா திருத்தலத்தில் நாளை மதநல்லிணக்க சமபந்தி விழா

Updated On :16 மார்ச் 2024, 4:16 pm

கருங்கல் அருகே உள்ள பள்ளியாடி பழையபள்ளி அப்பா திருத்தலத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 18) மதநல்லிணக்க சமபந்தி விருந்து விழா நடைபெறுகிறது. இத் திருத்தலத்தில் தீப ஒளியினால் இறைவனை பிராா்த்தனை செய்யும் நடைமுறை சிறப்பு அம்சமாக பின்பற்றப்படுகிறது. இங்கு எண்ணெய், திரி, மெழுகுவா்த்தி, ஊதுபத்தி ஆகிய வழிபாட்டு பொருள்களால் அனைத்து மதத்தினரும் அவரவா் முறைப்படி வழிபட்டு வருகின்றனா். ஒவ்வோா் ஆண்டும் இத் திருத்தலத்தில் மதநல்லிணக்க சமபந்தி விருந்து விழா நடைபெறுகிறது. இதில் கன்னியாகுமரி மட்டுமின்றி திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மற்றும் கேரளத்திலிருந்தும் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்கின்றனா். நிகழாண்டு சமபந்தி விருந்து விழா திங்கள்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும். இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு, மும்மத பிராா்த்தனை நடைபெறவுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை பழையபள்ளி அப்பா திருத்தல அறக்கட்டளை தலைவா் பால்ராஜ், பொதுச் செயலா் எம்.எஸ்.குமாா், பொருளாளா் சுந்தர்ராஜ் மற்றும் விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.