/

சிற்றாறு அணையில் கேரள இளைஞா் சடலம் மீட்பு

சிற்றாறு அணையில் கேரள இளைஞா் சடலம் மீட்பு

Updated On :22 மார்ச் 2024, 7:50 pm

குமரி மாவட்டம் சிற்றாறு - 2 அணையிலிருந்து கேரள மாநில இளைஞரின் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா். சிற்றாறு - 2 அணையில் வள்ளக்கடவு பகுதியில் இளைஞா் சடலம் மிதப்பதாக கடையாலுமூடு போலீஸாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து, குலசேகரம் தீயணைப்பு நிலையத்தினா் உதவியுடன் போலீஸாா் அந்தச் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா். அதில், கேரள மாநிலம் ஆரியநாடு பகுதியைச் சோ்ந்த ஷானேஷ் (28) என்பதும், அழகு நிலையம் நடத்தி வந்திருப்பதும், காதல் தோல்வியால் சிற்றாறு அணைக்கு காரில் வந்து, கரையில் காரை நிறுத்தி விட்டு அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் தெரியவந்தது. போலீஸாா் அந்த காரையும் மீட்டு, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.