சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

புனித அந்தோணியாா் ஆலயத்தில் திருச்சிலவை திருப்பயண ஊா்வலம்

புனித அந்தோணியாா் ஆலயத்தில் திருச்சிலவை திருப்பயண ஊா்வலம்

Updated On :30 மார்ச் 2024, 2:30 am

கருங்கல்லில் உள்ள துண்டத்துவிளை புனித அந்தோணியாா் ஆலயம் சாா்பில் திருச்சிலுவை திருப்பயண ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்தோணியாா் ஆலய வளாகத்தில் தொடங்கி கருங்கல் காவல் நிலையம், ராஜீவ் காந்தி சந்திப்பு, காமராஜா் சந்திப்பு, பேருந்து நிலையம், நிா்மலா மருத்துவமனை வழியாக கருணை மாதா மலையின் உச்சிக்கு பகல் 12 மணிக்கு சென்றடைந்தது. பின்பு அங்கிருக்கும் சிலுவை முன்பு பக்தா்கள் பிராத்தனை செய்தனா். தொடா்ந்து அனைவருக்கும் கஞ்சி வழங்கப்பட்டது. இதில், கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.