களியக்காவிளை நாஞ்சில் கல்லூரி ஆண்டு விழா

களியக்காவிளை நாஞ்சில் கல்லூரி ஆண்டு விழா

களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை -அறிவியல் கல்லூரியில் 10ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரிச் செயலா் அருள்தந்தை எம். எக்கா்மென்ஸ் மைக்கேல் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எம். அமலநாதன் ஆண்டறிக்கை வாசித்தாா்.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகப் பதிவாளா் ஜெ. சாக்ரடீஸ் உரையாற்றினாா். கல்லூரி வழக்குரைஞா் காஸ்மிக் சுந்தா், வழக்குரைஞா் எல். சைமன் டாட்சிங் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற மாணவா்களுக்கும், அதைப் பெறுவதற்கு ஊக்கமளித்த ஆசிரியா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

கல்லூரி நிதி பரிபாலகா் அருள்தந்தை ஏ. டோமி லிலில் ராஜா வரவேற்றாா். கணினியியல் துறைத் தலைவா் கே.சி. அபிலாஷ் சாம் பால்ஸ்டின் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com