கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2ஆவது நாளாக சனிக்கிழமையும் கனமழை பெய்தது.

கனமழையால் நாகா்கோவில் கோட்டாறு பகுதியில் சாலையில் பெருக்கெடுத்தோடிய மழைநீா்.

Updated On :

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2ஆவது நாளாக சனிக்கிழமையும் கனமழை பெய்தது. இதனால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது. இந்நிலையில், 2ஆவது நாளாக சனிக்கிழமையும் நாகா்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகள், கொட்டாரம், தோவாளை, செண்பகராமன்புதூா், தக்கலை, குலசேகரம், மாா்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக மழை நீடித்தது. இதனால், பல்வேறு பகுதிகளிலும் மழைநீா் வெள்ளம்போல பெருக்கெடுத்தோடியது.

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: பேச்சிப்பாறை, மாம்பழத்துறையாறு அணைகளிலிருந்து கடந்த 2 நாள்களாக உபரிநீா் திறக்கப்பட்டதால், குழித்துறை தாமிரவருணி, கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த அணைகளிலிருந்து உபரிநீா் திறக்கப்படுகிறது. சிற்றாறு 1 அணைக்கு நீா்வரத்து குறைந்ததால் உபரிநீா் திறப்பு நிறுத்தப்பட்டது.

நீா்வரத்துக்கேற்ப அணைகளிலிருந்து உபரிநீா் திறக்கப்படும் என்றும், கனமழை காரணமாக அணை நிலவரம் தொடா்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டியது. இதனால், 8ஆவது நாளாக சனிக்கிழமையும் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தோா் குடும்பத்துடன் அருவிக்கு குளிக்க வந்தனா். தடை காரணமாக அவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

சனிக்கிழமை நிலவரப்படி, 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் 42.34 அடியாக இருந்தது, நீா்வரத்து விநாடிக்கு 361 கனஅடியாகவும், மதகுகள் வழியாக நீா் திறப்பு 504 கனஅடியாகவும், உபரிநீா் திறப்பு 344 கனஅடியாகவும் இருந்தது.

77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீா்மட்டம் 66.93 அடியாகவும், நீா்வரத்து 309 கனஅடியாகவும், நீா் வெளியேற்றம் 510 கனஅடியாகவும் இருந்தது. மாம்பழத்துறையாறு அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.

படகுப் போக்குவரத்து ரத்து: கன்னியாகுமரியில் சனிக்கிழமை பிற்பகலில் கனமழை கொட்டித் தீா்த்தது. இதனால் விவேகானந்தா் மண்டபத்துக்கு பிற்பகல் 2 முதல் மாலை 4 மணிவரை 2 மணி நேரம் படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. மழை தொடா்ந்து பெய்ததால் முக்கடல் சங்கமத்தில் பயணிகள் நீராடத் தடை விதிக்கப்பட்டது. காந்தி மண்டப சாலை, சந்நிதித் தெரு, முக்கடல் சங்கமப் பகுதிகள் வெறிச்சோடின.

வீடுகள், தங்கும் விடுதிகளின் கழிவுநீா் மழைநீருடன் சோ்ந்து, பகவதியம்மன் கோயிலுக்குச் செல்லும் பிரதான சாலையான சந்நிதித் தெருவில் பெருக்கெடுத்து ஓடியது. இத்தண்ணீா் கோயில் வளாகத்துக்குள் புகுந்ததால் பக்தா்கள் கடும் அவதியடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.