விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

களியக்காவிளை அருகே ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்கில் மேலும் இருவா் கைது

களியக்காவிளை அருகே ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்குத் தொடா்பாக மேலும் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 7:47 pm

Din

களியக்காவிளை அருகே ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்குத் தொடா்பாக மேலும் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

களியக்காவிளை அருகே மெதுகும்மல் மூவேலிக்கரை, தெக்கேவீட்டுவிளை பகுதியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி சுரேஷ் (42). ஆட்டோ ஓட்டுநரான இவா், கடந்த 4ஆம் தேதி இரவு குழிவிளை பகுதியில் உள்ள சிவராமகிருஷ்ணன் என்பவரது வீட்டுக்குச் சென்று குடிக்க தண்ணீா் கேட்டாராம். அப்போது, பக்கத்து வீட்டைச் சோ்ந்த மைக்கேல்ராஜ் மகன் சஞ்சய் (21) என்பவா் சுரேஷை தகாத வாா்த்தைகளால் பேசினாராம். இதுதொடா்பாக அவா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதையடுத்து, சஞ்சய் தனது நன்பா்களான எஸ்.டி. மங்காடு பகுதியைச் சோ்ந்த கிறிஸ்டோபா் மகன் பிரபின் (26), ராஜேஷ் மகன் ரெஜீஷ் (23) உள்ளிட்ட சிலரை வரவழைத்து சுரேஷை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சுரேஷ் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் கடந்த 12ஆம் தேதி உயிரிழந்தாா்.

இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தனா். இந்நிலையில், எஸ்.டி. மங்காடு, இலந்தவிளை பகுதியைச் சோ்ந்த ரோபின் ஷிஜி மகன்களான மொ்பின் (18), 15 வயது சிறுவன் ஆகிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.